அன்பு நண்பர்களுக்கு, வணக்கம்.
நலம் தானே. தமிழனாக இருப்பதில் நான் பெருமையடைகிறேன். தமிழ்மொழி பல்வேறு ஆற்றல்களைத் தன்னுட் கொண்டுள்ளது. தமிழுக்காக இங்கே உழைத்தவர்கள் பலர். அவர்களது செயற்பாடுகள் பல்வேறு வடிவத்தில் உள்ளன. கடந்த பல ஆயிரம் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிற இந்த மொழி, பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையிலும் தன்னைத் தக்கவைத்துக் கொண்டு உயிர்த் துடிப்போடு இயங்கி வருகிறது.
இதற்காக உழைத்த பல தமிழ் அறிஞர்களின் செயற்பாடுகளை நாம் திரட்டித் தொகுக்க வேண்டும். இன்றைய சூழலின் புதுமைக்கு ஏற்றவாறு தமிழின் பல்வேறு ஆக்கங்களையும், பதிவுகளையும், பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும். இது தொடர்பாக உங்களது கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன்.

தமிழர்கள் மட்டுமல்ல, உலகமே தமிழ் கற்றுக் கொள்ள ஊக்குவிப்போம்.
----(http://www.tamilteaching.in)-----
தமிழ்க் கல்வி தொடர்பாகக்
கடந்த 25 ஆண்டுகளாக
ஆசிரியப் பயிற்றுநராக
நான் கண்டறிந்த
அனைத்துக் கல்வி நுட்பங்களையும்,
அதற்கான இணைய இணைப்புகளையும்
இந்த இணையத்தில் கண்டு
வலைஇறக்கச் சொடுக்கவும்.
கல்வி கொடுப்பது
கண் கொடுப்பதைப் போன்றது.
பத்து மழலையர்களை இணைத்துக் கொண்டு
தமிழ் கற்பிக்கத் தொடங்குங்கள்
கற்பித்தல் தொடர்பான அனைத்தும்
அனுப்பி வைக்கிறேன்.
----(http://www.thamizham.net)-----
கடந்த 15 ஆண்டுகளாக
இந்த இணையத்தைத் தொடர்ந்து
இயக்கி வருகிறேன்.
இதன் அனைத்துப் பக்கங்களையும்
நான் தான் வடிவமைக்கிறேன்.
தமிழின் கலை வடிவங்களையும்,
தமிழை எளிமையாகக் கற்பிக்கிற
கல்வி நுட்பத்தையும்,
தமிழுக்கான இயங்கியவர்களையும்,
சித்தமருத்துவம், இசை நுட்பம் என்கிற
தமிழ்க்கலை ஆற்றல்களையும், அடுத்த
தலைமுறையினருக்காகச் சேகரித்துப்
பாதுகாக்க வேண்டும் என்பதே
இந்த இணையத்தின் நோக்கம்.

ஒரே நாளில்
300
திருக்குறள்
படிக்க
-(ஒரேநாளில் 300 திருக்குறளை உள்வாங்கப் பயிற்சி)-
பாடல் கேட்க ஒலிப்பானைத் திறந்து வைக்கவும்
இணைப்பைச் சொடுக்கிக் கேட்கவும்
ஒவ்வொரு பக்கமாகப் படித்துப்
பயிற்சி கொடுக்கவும்.
--(THAMIZHAM FM - தமிழம்.பண்பலை)--
24 மணி நேரமும் திருக்குறள் பாடல்கள் ஒலிக்கும்
தமிழ் உணர்வுப் பாடல்கள் ஒலிக்கும்
தமிழ் இலக்கியப் பாடல்கள் இசையில் ஒலிக்கும்
நாளும் அரை மணி நேரம் கேட்க வாழ்வு மலரும்
(Updated : 02 - 08 - 2017) - தொடர்புக்கு - mail : pollachinasan@gmail.com, mobile : 9788552061, 8667 421 322, skype ID : pollachinasan1951,