002

ல, ள, ழ - ர, ற, வேறுபாட்டினை அறிந்து கொள்ள.

அலகு = பறவையின் மூக்கு.
அளகு = பெண் மயில்.
அழகு = வனப்பு.


அலம் = கலப்பை.
அளம் = உப்பளம்.


அலி = ஆண் பெண் தன்மைகள் அற்ற பேடி.
அளி = கொடு.
அழி = நாசம் செய்துவிடு.


அலை = கடல் அலை.
அளை = சேறு, தயிர்.
அழை = கூப்பிடு


ஆல் = ஆலமரம்.
ஆள் = ஆண் மகன், ஆளுதல்.
ஆழ் = முழுகு.


ஆலி = மழைத்துளி.
ஆளி = விலங்கு.
ஆழி = கடல்.


இலகு = விளங்கு.
இளகு = நெகிழ்.


இலை = தாவர இலை.
இளை = மெலிதல்.
இழை = நூல்.


உலர = காய
உளர = தடவ.


உலவு = நடந்து செல்.
உளவு = வேவு.
உழவு = பயிர்த்தொழில்.


உளி = கருவி.
உழி = இடம்.


உலை = உலைக்களம்.
உளை = பிடரி மயிர்.
உழை = மான், பக்கம், வேலை செய்தல்.


உல்கு = சுங்கம்.
உள்கு = நினை.


எல் =பகல்.
எள் = ஒரு தானியம்.


ஒலி = ஓசை.
ஒளி = பிரகாசம்.
ஒழி = அழித்து விடுதல்.


கலம் = பாத்திரம்.
களம் = போர்க்களம், நெற்களம்


கலங்கு = கலக்கம் அடை.
கழங்கு = பெண்களின் விளையாட்டுப் பொருள்.


கலி = கலி யுகம்.
களி = மகிழ்ச்சி.
கழி = நீக்கு, குச்சி.


கலை = வித்தை, ஆண் மான்.
களை = அயர்ச்சி, தாவரக்களை.
கழி = மூங்கில், கரும்பு.


கலைத்தல் = பிரித்தல்
களைத்தல் = சோர்தல்.


காலி = பசுக்கூட்டம்.
காளி = ஒரு தெய்வம்.
காழி = மலம், சீகாழிஎன்னும் ஊர்.


காலை = நாளின் ஒரு பகுதி.
காளை = எருது.


கிளவி = சொல்.
கிழவி = முதியவள்.


குளம்பு = விலங்கின் கால் பகுதி.
குழம்பு = உணவின் ஒரு வகை.


கூலி = சம்பளம்.
கூளி = பேய்.


கொலை = கொல்லுதல்.
கொளை = பாட்டு.


கொல் = கொல்லுக.
கொள் = வாங்குக.


கோல் = அம்பு, ஊன்றுகோல்.
கோள் = புறங்கூறுதல்.


சூலை = ஒரு நோய்.
சூளை = செங்கல் சூளை.


சூல் = கர்ப்பம்.
சூள் = சபதம்.
சூழ் = சுற்றிக்கொள்.


தலை = உடல் உறுப்பு.
தளை = கட்டு, கை விலங்கு.
தழை = இலை.


தவலை = ஒரு பாத்திரம்.
தவளை = நீர் வாழ் உயிரினம்.


தால் = நாக்கு, தாலாட்டு.
தாள் = முயற்சி, கால்.
தாழ் = பணிந்து போ.


துலை = தராசு.
துளை = துவாரம்.


தோல் = சருமம்.
தோள் = புஜம்.


நலி = வருந்து.
நளி =நெருக்கம்.


நல்லார் = நல்லவர்கள்.
நள்ளார் = பகைவர்கள்.


பல்லி = கௌளி.
பள்ளி = பள்ளிக்கூடம், சயன அறை.


பசலை = மகளிர் நிறவேறுபாடு.
பசளை =ஒரு வகைக் கொடி.


பால் = பசும் பால்.
பாள் = தாழ்ப்பாள்.
பாழ் = பாழாதல்.


பாலை = ஒரு வகை நிலம்.
பாளை = மரத்தின் பாளை.


புலி = வேங்கை.
புளி = புளிய மரம்.


புளுகு = பொய்.
புழுகு = புனுகு, ஒரு வாசனைப் பொருள்.


போலி = ஒரு போல இருப்பது.
போளி = இனிப்பு உணவு.


மல்லர் = மற்போர் செய்பவர்.
மள்ளர் = உழவர்.


மால் = மயக்கம், திருமால்.
மாள் = இறந்து போதல்.


முலை = பால் சுரக்கும் இடம்.
முளை = விதையின் முளை.
முழை = குகை.


மூலை = ஒரு ஓரம்.
மூளை = தலைக்குள் இருப்பது.


வலி = வலிமை, உடல் வலி.
வளி = காற்று.
வழி = பாதை.


வலை = மீன் பிடிக்கும் வலை.
வளை = சங்கு.
வழை = புன்னை மரம்.


வாலை = இளம் பெண்.
வாளை = ஒரு வகை மீன்.
வாழை = ஒரு மரம்.


வால் = மிருகங்களின் ஒரு உறுப்பு.
வாள் = ஒரு ஆயுதம்.
வாழ் = வாழ்ந்திரு.


விலக்கு = ஒதுக்கு.
விளக்கு = தீபம், விளக்கிச் சொல்லல்.


விலா = மார்பின் கீழ் உள்ள பகுதி.
விளா = ஒரு மரம்.
விழா = திருவிழா.


விளி = அழை.
விழி = கண்.


விலை = கிரயம்.
விளை = உண்டு பண்ணு.
விழை = விரும்பு.


வேல் = ஒரு ஆயுதம்.
வேள் = மன்மதன்.


வேலை = கடல், தொழில்.
வேளை = பொழுது, சமயம்.


அரம் = ஒரு கருவி.
அறம் = தருமம்.


அரன் = சிவன்.
அறன் = தருமம்.


அரி = திருமால்.
அறி = உணர்வாய்.


அரிவாள் = வெட்டும் கருவி.
அறிவாள் = அறிந்து கொள்வாள்.


அருகு = சமீபம்.
அறுகு = அருகம் புல்.


அருந்து = உண்பாய்.
அறுந்து = துண்டாகி.


அரை = பாதி.
அறை = வீட்டின் ஒரு பகுதி, கன்னத்தில் அடி.


ஆரல் = ஒரு வகை மீன்.
ஆறல் = தணிதல்.


இரத்தல் = யாசித்தல்.
இறத்தல் = சாதல்.


இரக்கம் = மனம் இளகுதல்.
இறக்கம் = சரிவு, குறைதல்.


இரங்கு = மனம் இளகு.
இறங்கு = கீழே இறங்கு.


இருக்கு = நான்கு வேதங்களில் முதல் வேதம்.
இறுக்கு = அழுத்தமாகக் கட்டு.


இரும்பு = ஒரு உலோகம்.
இறும்பு = குறுங்காடு.


இரை = உணவு, ஓசை.
இறை = வரி, அரசன், கடவுள்.


உரல் = தானியம் குற்றும் உரல்.
உறல் = பொருந்துதல்.


உரவு = வலிமை.
உறவு = சொந்தம்.


உரி = பட்டை.
உறி = தூக்கு.


உரு = வடிவம்.
உறு = மிகுதி.


உரை = பேச்சு.
உறை = பை.


ஊர = நகர்ந்து செல்ல.
ஊற = சுரக்க.


எரி = நெருப்பு.
எறி = வீசு.


எரித்தல் = தீயினால் எரித்தல்.
எறித்தல் = வெயில் வீசுதல்.


ஏரி = நீர் நிலை.
ஏறி = ஏறுதல்.


ஒருத்தல்=யானை.
ஒறுத்தல்=தண்டித்தல்.


கரி=அடுப்புக்கரி,யானை.
கறி = தின்னும் கறி,


கருத்து = எண்ணம்.
கறுத்து = கரிய நிறமாகி.


கரை = ஓரம்.
கறை = குற்றம்.


கீரி = ஒரு விலங்கு.
கீறி = பிளந்து.


குரங்கு = வானரம்.
குறங்கு = தொடை.


குரவர் = பெரியோர்.
குறவர் = மலை ஜாதியினர்.


குருகு = நாரை.
குறுகு = சுருங்கு.


குரை = ஒலி.
குறை = ஊனம்.


கூரை = வீட்டின் கூரை.
கூறை = புடவை.


சீரிய = சிறந்த.
சீறிய = சினந்த.


செரு = போர்.
செறு = வயல்.


சேரல் = இணைதல்.
சேறல் = சென்றடைதல்.


சொரிய=சிந்த,ஊற்று எடுக்க.
சொறிய = விரலால் சுரண்ட.


தரி = அணிந்துகொள்.
தறி = வெட்டு, நறுக்கு.


திரை = அலை, படுதா.
திறை = கப்பம்.


துரவு = கிணறு.
துறவு = சந்நியாசம்.


தெரித்தல் = தெரிவித்தல்.
தெறித்தல் = சிதறுதல்.


தேர = ஆராய, சிந்திக்க.
தேற = தெளிய.


நரை = வெள்ளை முடி.
நறை = தேன், வாசனை.


நிரை = வரிசை.
நிறை = நிறைவு.


பரந்த = பரவலான.
பறந்த=பறவை போல


பரவை = கடல்.
பறவை = பட்சி.


பரி = குதிரை.
பறி = பிடுங்கு.


பிரை = உறை மோர்.
பிறை = இளம் நிலவு.


புரம் = ஊர்.
புறம் = பக்கம்.


புரவு = காத்தல்.
புறவு = புறா


பொரி = நெல் பொரி.
பொறி = இயந்திரம், அடையாளம்.


பொரு = போர் செய்.
பொறு = பொறுத்துக் கொள்.


பொருப்பு = மலை.
பொறுப்பு = கடமை.


மரம் = விருட்சம்.
மறம் = பாவம்.


மரி = இறத்தல்.
மறி =தடுத்தல்.