009

தமிழ்ச் சங்கங்கள்....

- டாக்டர் பெ.சந்திர போஸ் சென்னை - .... ( நன்றி - karanthaijayakumar.blogspot )

சிங்கத்திற் சீர்த்தது வல் நாரசிங்கம், திகழ்மதமா
தங்கத்திற் சீர்த்தது ஐராவதமா தங்கம், விண்சேர்
சங்கத்திற் சீர்த்தது இராசாளி யப்பெயர்க் காவலனாற்
சங்கத்திற் சீர்த்தது தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கமே


கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி என்று தமிழ்க் குடியின் தொன்மையினைச் சான்றோர் பறைசாற்றுவர். உலகின் முதன் மொழியாகத் தோன்றிய தமிழ் மொழியினைக் காக்கவும், வளர்க்கவும், போற்றவும் தோன்றிய அமைப்புகளே தமிழ்ச் சங்கங்களாகும்.

தமிழ் மொழி தோன்றிய காலந்தொட்டே, தமிழ்ச் சங்கங்களும் தோன்றி, தமிழ்ப் பணியாற்றி வந்துள்ளன.ஆனால் முதல், இடை, கடை என மூன்று சங்கங்களே தமிழ் வளர்த்ததாக, ஒரு மாயை இன்றைய தமிழுலவில் நிலவி வருகின்றது. உண்மையில் முச் சங்கங்களுக்கு முந்தியும், பிந்தியும் தமிழ் நாட்டில், தமிழ்ச் சங்கங்கள் தோன்றி தமிழ் வளர்த்துள்ளன.கி.மு. 30,000 ஆம் ஆண்டு முதல், பல்வேறு கால கட்டங்களில் தோன்றி, தமிழ் வளர்த்து, பின்னர் இயற்கையின் சீற்றத்தாலும், கால வெள்ளத்தாலும், அழிக்கப்பட்ட, மறக்கப்பட்ட, தமிழ்ச் சங்கங்கள் பற்றிய குறிப்புகளை, சங்க நூல்களும், சமண நூல்களும், பிற நாட்டு வரலாற்றுக் குறிப்புகளும், நமக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன.

அவையாவன,

பகுறுளியாற்றுத் தென் மதுரைத் தமிழ்ச் சங்கம்
இடம் பகுறுளியாற்றின் கரையில் இருந்த தென் மதுரை
காலம் – கி.மு.30,000 முதல் கி.மு.16,500 வரை


மகேந்திர மலைத் தமிழ்ச் சங்கம்
இடம் - குமரிக் கண்டத்து, குமரிநாட்டு, ஏழ் குன்ற நாட்டின்
மகேந்திர மலை
காலம் – கி.மு. 16,000 முதல் கி.மு. 14,550 வரை


பொதிய மலைத் தமிழ்ச் சங்கம்
இடம் - பொதிய மலை, பாவநாசம்
காலம் - கி.மு. 16,000 முதல்


மணிமலைத் தமிழ்ச் சங்கம்
இடம்- மணிமலை,இது மேருமலைத் தொடரின் 49
கொடு முடிகளில் ஒன்று, ஏழ்குன்ற நாட்டு மகேந்திர மலைக்கும் தெற்கில் இருந்தது
காலம் – கி.மு.14,550 முதல் கி.மு.14,490 வரை


குன்றம் எறிந்த குமரவேள் தமிழ்ச் சங்கம்
இடம் - திருச்செந்தூர், இந்நகருக்கு திருச் சீரலைவாய்
என்றும் அலை நகர் என்றும் பெயருண்டு
காலம் - கி.மு.14,058 முதல் கி.மு.14,004 வரை


தலைச் சங்கம்
இடம் - குமரி ஆற்றங்கரையில் இருந்த தென் மதுரை
காலம் - கி.மு.14,004 முதல் கி.மு. 9,564 வரை


முது குடுமித் தமிழ்ச் சங்கம்
இடம் - கொற்கை
காலம் - கி.மு.7,500 முதல் கி.மு. 6,900 வரை


இடைச் சங்கம்
இடம் - தாம்பிரபரணி ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த கபாட புரம்
காலம் - கி.மு. 6,805 முதல் கி.மு. 6,000 வரை


திருப்பரங்குன்றத்துத் தென்மதுரைத் தமிழ்ச் சங்கம்
இடம் - திருப்பரங்குன்றம் பக்கம் இருந்த தென் மதுரை
காலம் - கி.மு. 1,915 முதல் கி.மு. 1,715 வரை


கடைச் சங்கம்
இடம் - நான்மாடக் கூடல், மதுரை ஆலவாய் எனப்படும் உத்தர மதுரை
காலம் - கி.மு. 1,715 முதல் கி.பி.235 வரை


வச்சிர நந்தி தமிழ்ச் சங்கம்
இடம் - திருப்பரங்குன்றத்து தென் மதுரை
காலம் - கி.பி. 470 முதல் கி.டிப.520 வரை


கி.பி. 470 இல் வச்சிர நந்தி என்னும் சமண மதத் தலைவரால், சமண மததை வளர்க்கும் பொருட்டு, ஒரு தமிழ்ச் சங்கம் திருப்பரங்குன்றத்துத் தென் மதுரையில் தோற்றுவிக்கப் பட்டது. இச் சங்கம் கி.பி.520 வரை செயலாற்றியது.

வச்சிர நந்தித் தமிழ்ச் சங்கத்திற்குப் பின் தமிழ் மொழியில், வட மொழிச் சொற்கள் கலக்கத் தொடங்கின. தனித் தமிழின் வளர்ச்சி குன்றியது. தமிழகத்தின் ஒவ்வொரு ஆலயங்களுக்கும். புதிது புதிதாக வட மொழிப் புராணங்கள் தோன்றத் தொடங்கின.

கி.பி. 520 இல் தொடங்கி, அடுத்த 1381 ஆண்டுகள் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பே இல்லாமல், தமிழ் மொழியின் வளமும், பொலிவும் குன்றத் தொடங்கியது. வட மொழி வளரத் தொடங்கியது. தமிழும் வடமொழிச் சொற்களும் கலந்து பேசும் மணிப் பிரவாள நடையே பேச்சு மொழியாக மாறியது.