024

யார் தீவிரவாதிகள்.....? யார் பயங்கரவாதிகள்....??

- பாலசந்திரன் மாணவர் இயக்கம் .... ( நன்றி - வல்வை அகலினியன் )

ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே,!

* கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான், உங்கள் ஜனநாயகமா...?

இதையெதிர்த்து ஆயுதம் தூக்கினால் தீவிரவாதமா...??

* ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும் சுட்டுக் கொல்வதுதான்,. உங்கள் ஜனநாயகமா...?.

இதையெதிர்த்தால் தீவிரவாதமா....??

* பால்குடி பிஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து, தாயைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு அந்தப் பிஞ்சுகளை அனாதையாக்கி தெருத் தெருவாக அலையவிடுவதுதான்,. உங்கள் ஜனநாயகமா? இதற்கு ஒத்துழையாமல் வெகுண்டெலுந்தால் அது தீவிரவாதமா....???

* மட்டக்களப்பில் வயதிற்கு வந்து ஒரு வாரமே ஆன பதின்மூன்று வயதுச் சிறுமி புனிதவதியை ஏழு சிங்கள இராணுவ காட்டுமிராண்டிப் படைகள் தாயின் முன்னே கதறக் கதற கற்பழித்து அந்தச் சிறுமியை சித்தப் பிரமையாக்கியதுதான்,.­ உங்கள் ஜனநாயகமா...?

இதையெதிர்த்து அடித்தால் அது தீவிரவாதமா....??

* இதே போல் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி கிருசாந்தியை கற்பழித்துக் கொன்று புதைத்ததுதான்,. உங்கள் ஜனநாயகமா?

* சமாதான காலத்திலே மன்னார் வங்காலையில் அதிகாலை ஒரு வீட்டிற்குள் புகுந்த சிங்களப் காட்டுமிராண்டிப் படைகள் அங்கே குடும்பத்தோடு தூங்கிக் கொண்டிருந்த இளம் தாயை கற்பழித்துக் கொன்று விட்டு, தந்தையையும் கொலை செய்து விட்டு, அவர்களின் இரண்டு பிஞ்சுப் பாலகர்களையும் உயிரோடு தூக்குக் கயிற்றிலே தொங்க விட்டு கொலை செய்வதுதான்,.. உங்கள் ஜனநாயகமா...?

இதற்கு நியாயம் கேட்டால் தீவிரவாதமா.....??

* வள்ளிபுனத்திலே 53 செஞ்சோலை பாடசாலைப் பிஞ்சுகளை வானத்தில் இருந்து விமான மூலம் குறி தவறாமல் வேண்டுமென்றே குண்டு வீசி சதைப் பிண்டங்களாக, துண்டு துண்டுகளாக சிதைத்துக் கொன்று குவித்து இரத்தத்தில் குளிக்க வைத்ததுதான்,. உங்கள் ஜனநாயகமா...?

பிள்ளையை கொன்றவனை எதிர்த்ததால் இது தீவிரவாதமா....??

* சுற்றிவளைப்பு என்ற பெயரில் சிங்களப் படைகள் கிராமங்களுக்குள் புகுந்து பல பெண்களின் கற்பை சூறையாடி அவர்களின் உயிர்ப்பையினை நிரப்பி, அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளைக் கொடுத்தும், பருவமாகத பள்ளிச் சிட்டுக்கள் முதல் பால் மடி வற்றிப்போன வயதான பெண்கள் வரை காமக்குருடர்கள் போல் அவர்களைப் பிடித்து கூட்டத்தோடு தெரு நாய்களைப்போல் மாறிமாறி கற்பழித்து கொன்று விட்டு மலசல கழிவுத் தொட்டிகளுக்குள்ளும்,­ பாழாங் கிணறுகளுக்குள்ளும் மூழ்கடித்து முகவரி தெரியாமல் அழித்துத் தொலைப்பதுதான், உங்கள் ஜனநாயகமா...?

இதை தடுத்த புலிகளா உங்கள் கண்களுக்கு தீவிரவாதிகளாக தெரிகிறார்கள்....???

* வல்வைப் படுகொலைகள் , சாவகச்சேரிப் படுகொலைகள், அளவெட்டிப் படுகொலைகள், அல்லைப்பட்டிப் படுகொலைகள், மண்டைதீவுப் படுகொலைகள், குமுதினிப்படகுப் படுகொலைகள், சத்துருக்கொண்டான் டிப்போ படுகொலைகள், நவாலிப் படுகொலைகள், பொத்துவில் படுகொலைகள், கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், சம்பூர் படுகொலைகள், வீரமுனைப் படுகொலைகள் மற்றும் கிழக்கு மாகாணப் படுகொலைகள் என்று எண்ணற்ற படுகொலைகளை ஊர் ஊராக, கிராமம் கிராமமாக, தெருத் தெருவாக தமிழர்களைப் பிடித்து துடிக்கத் துடிக்க கொன்று குவித்து மண்ணுக்குள் உரமாக்கியதுதான், உங்கள் ஜனநாயகமாக.... ?

பதிலுக்கு நாங்கள் தாக்கினால் அது தீவிரவாதமா....??

* உயிரற்ற உடலைக்கூட விட்டு வைக்காமல் கற்பழித்து விட்டு, பின் அந்த உயிரற்ற உடலின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டியும், சிதைத்தும் அலங்கோலமாக்குவதுதான்­,.. உங்கள் ஜனநாயகமா...?

இதை எதிர்த்து போரிட்டால் நாங்கள் தீவிரவாதிகள்...??

* இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து எரிகுண்டுகளையும், நச்சுக் குண்டுகளையும் போட்டு கூண்டோடு துடிக்கத் துடிக்க கொன்று குவிப்பதுதான்,. உங்கள் ஜனநாயகமா?.

* உயிரைப் பாதுகாக்க பதுங்குக் குழிக்குள் ஒளிந்தவர்களையும், இந்த உலகை பார்க்கும் முன்னே தாயின் கருவறைக்குள் பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்று புதைப்பதுதான்,..உங்கள் ஜனநாயகமா?

* இறுதி யுத்தத்தில் கைதான பொதுமக்களை போராளிகள் என்ற பெயரில் விசாரணை என்று அழைத்துச் சென்று ஆண்களை கொலை செய்து மூடி மறைத்தும், பெண்களை கூட்டத்தோடு கற்பழித்து, சிலரை கொலை செய்தும், வேறு பலரை கட்டாய விபச்சாரியாக்கி விலை பேசி விற்றுத் தீர்த்ததுதான்,. உங்கள் ஜனநாயகமா...? இதையெதிர்த்த ஒரே காரணத்திற்காக நாங்ள் தீவிரவாதிகளா....??

* கைது செய்து கொலை செய்த ஆண்களின் மனைவிமாரிடம், அவர்கள் கணவர்மார்கள் உயிரோடு இருப்பதாக அவர்களின் பெயரைச் சொல்லி இன்றும் கூட காமவித்தைகளை அரங்கேற்றி விளையாடிக் கொண்டிருப்பதுதான், உங்கள் ஜனநாயகமா... ?

சொல்லுங்கள் எது தீவிரவாதம்...???

இப்படியாக. ஈழத்தமிழன் ஒளிந்துகொள்ள இடமேதுமில்லாமல் அலைந்து அலைந்து இறுதியில் நிராயுதபாணிகளாக அரச படைகளிடம் அடைக்கலமாக அவர்களை வயது வித்தியாசமின்றி கொன்று குவித்து களைத்துப் போய் முடியாமல் காயம்பட்டவர்களையும்,­ கையில் அகப்பட்டவர்களையும் செத்த பாம்பினைப் போல் கைகளைக் கட்டி வரிசையாக தெருக்களில் விறகுபோல் அடுக்கி வைத்து கவச வாகனங்களால் மிதித்து துடிக்கத் துடிக்க சாகடித்தீர்களே,. இதுதான் உங்கள் ஜனநாயகமா..?...

இதைதட்டிக்கேட்டால் மாணவர்கள் நாங்களும் தீவிரவாதிகள் தானே....???

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா..?


யார் தீவிரவாதிகள்.....? யார் பயங்கரவாதிகள்....?? நாங்களா தீவிர வாதிகள்..???

நன்றி-அண்ணண் வல்வை அகலினியன் - பாலசந்திரன் மாணவர் இயக்கம் //மாணவர்களின் தாகம் தமிழீழத்தாயகம்